×

திருந்திய நெல் சாகுபடியில் தொழில்நுட்பங்கள் வேளாண்துறை ஆலோசனை

ஆண்டிபட்டி: தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி என்ற முறை சிறந்ததாகும். இச்சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான சான்று பெற்ற வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். 1 ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதைகளை பயன்படுத்த வேண்டும். நாற்றாங்காலை 1 எக்கருக்கு 40 சதுரமீட்டர் என்ற அளவில் மண்மக்கிய தொழுஉரம் 9:1 என்ற வீதம் பரப்பி விதைக்க வேண்டும். 14 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளிக்கு மார்க்கர் கருவிகளை பயன்படுத்த வேண்டும்.

The post திருந்திய நெல் சாகுபடியில் தொழில்நுட்பங்கள் வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Trintiya ,Antipatti ,Tamil Nadu ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...